உமது இரைச்சல்கள் இதமாய் வந்து கலந்ததுண்டு,
என் படுக்கையில் தூக்கத்தினூடே !
அந்தரத்தில் தொங்கும் தந்திக்கம்பிகளில்,
ஒய்யாரமாய் அமர்ந்திருக்குமே உமது கூட்டம் !
மொட்டைமாடிக்கு வரும்போதெல்லாம் ஓய்வின்றி,
வலமும்இடமும் பறந்து போக்குக்காட்டுவீரே கவனத்திற்கு !
எந்த இடத்தையும் பற்றியமர்ந்து குட்டி வாலாட்டும் கூட்டமே !
எங்கே போனீர் எமைக்கடந்து இங்கே இல்லாமல் !
துள்ளலாட்டம் போட்ட உமைக்கான தள்ளாட்டம் போடுது மனது !
அங்குமிங்கும் தேடுகிறேன் தொலைந்தபொருளை கண்டிடும் ஆர்வத்தில் !
காட்டவேண்டும் உமது குழுவை எமது குழந்தைக்கூட்டத்திற்கு !
காதில் விழுகிறது !!
"சிட்டுக்குருவிகள் அழிந்துவிட்டன"
எனும் செய்தி பற்றவைத்த தீயாய் !
விம்மிப் புடைக்கிறது நெஞ்சம் !
மரணம் வரலாம் பிறப்பு ஈடுசெய்யும் !
தனிமை வரலாம் இனிமை ஈடு செய்யும் !
இனம் அழியும் கொடுமை எந்த முடிவைத்தரும் ?
தடயங்களைத் தேடவேண்டுமா இனி குருவிகளுக்கு ?
அவைகளை குழந்தைகளாய்ப்பார்த்து குழந்தையாகியிருக்கிறேன் !
அச்சிறிய ஜீவன்களிடம் சிந்தை சிறைப்பட்டதும் உண்டு !
சென்றுவிட்ட உமக்காக நின்றுபெய்கிறது கண்ணீர் மழை !
என்செய்து எப்படி கொணர்வது உணர்வது உமது அருகாமையை ?
எதன் வளர்ச்சியில் துவங்கியது உமது வீழ்ச்சி ?
கண்ணெதிரே அழிந்துவிட்டவரே !
காணக் கிடைப்பீரா இனி ?
உறவைத்துண்டித்த பறவைகளே சிட்டுக்குருவிகளே !!
"உள்ளத்தில் வெறுமையாகவே உமக்கான இடம்"
கவிதைகள் உலகம் ..smdsafa..
எவரும் சொல்லாததை சொல்லமுயன்று,
சொல்லெடுத்துப் போராடுகிற யுக்தியை,
காதல்தான் தருவித்தது....................
பலநேரங்களில் சொல்லாமலேயே,
மௌனமாயும் முடிந்துபோகிறது சொல்லவந்தது !
அவைகளை மனதுள் மறையும் தோல்விகள்,
என்று மடித்து முடித்துவைத்து விடாமல்,
முயற்சிகளின் சின்னங்கள் என்று,
முழுமையாய் ஏன் அங்கீகரித்து முகரக்கூடாது நீ !!
முயற்சிகளும் காதலிக்கப்படவேண்டும் முழுமையாய் பெண்ணே !!
கவிதைகள் உலகம் ..smdsafa..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
உன் பிறந்தநாளன்று முதலாளாய் 12 மணிக்கே வாழ்த்தவில்லையென சண்டைக்கு வருகிறாய். நீ பிறந்த நேரத்தில் வாழ்த்துவதற்காய் நான் காத்திரு...
-
அவளின் தூக்க பொழுதுகளில் சிறுபிள்ளை முகம் காண தினம் தோறும் அவளை தேடி கனவில் ஒரு பயணம் காதல் என்ற உலகில் அவளின் முகவரி ...
-
வாழ்க்கை எனும் மலையிலே வெற்றி எனும் சிகரந்தொட சமுதாயம் எனும் சிற்பியால் செதுக்கப்படும் படிகளே ...
-
அன்பே! அழகுக்கு இலக்கணம் தெரியவில்லை உன்னை காணும் வரை.. கவிஞன் ஆனேன் பூ வாடி விடும் அதன் வாசமும் வாடாது.. நாம் கொண்ட நேசமும் மாறாது.. ...
-
அவள் காதல் இன்று என் கண்ணீராகவும், என் காதல் இன்று அவள் நாட்குறிப்பின் மிச்சமாகவும் தொடர்கிறேன் அவளின் நினைவுகளில் என் காதலை! ...






- Follow Us on Twitter!
- "Like Us on Facebook!
- RSS
Contact @ SMDSAFA