தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

ஆதாரம்



அழித்துவிட்டேன் நீ பிரிந்ததும்,

என்னிடமிருந்த நம் காதலை,

உறுதிப்படுத்தும் ஆவணங்களை !

ஆனாலும்,

அதையெல்லாம் பாதுகாத்து,

இப்போது இழந்து பரிதவிக்கும்,

நானிருப்பதுதான் பாரமாகவே

தோன்றுகிறது !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

நட்பு அன்பு காதல்



நாம் தேடமால்

 கிடைப்பது நட்பு ,

தேடினாலும்

  எளிதில் கிடைக்காது அன்பு,

தேட தேட

                தித்திப்பது காதல்


கவிதைகள் உலகம் ..smdsafa..

செடியில் பூத்த மலர் போல





என் வாழ்வும் செடியில்
பூத்த மலர் போல் தான்

செடி இதழ்கள் ஒரு முறை
தான் உதிரும்

நான் வாழ்க்கையில் பல
முறை உதிர்ந்து விட்டேன்

மண்ணுக்கு பிடித்த அளவுக்கு
மனிதனுக்கு பிடிக்க வில்லை

மண் என்னை மலர செய்கிறது
மனிதன் என்னை உதிர செய்கிறான்


கவிதைகள் உலகம் ..smdsafa..

ஒற்றையடிப்பாதை



சத்தம் எழுப்பாமல்

உனைத் தொடர்ந்து வந்து

காதல் சொல்கிறது

நீ நடந்து செல்லும்

ஒற்றையடிப்பாதை...!


கவிதைகள் உலகம் ..smdsafa..

கவிதைகள் உலகம் படங்கள்





கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;